கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் நேற்று முன் தினம் வியாழக்கிழமை மாலை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸவுடன் கல்முனையைச் சேர்ந்த பிரபல சமூக செயற்பாட்டாளர் ஏ. எம். நஸீர் ஹாஜி சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டார் .
இதன்போது கல்முனையில் உள்ள இனவாதம், பிரதேசவாதம் மற்றும் கல்முனை உப பிரதேச செயலக விடயமாக கலந்து பேசிய பின் அதுவிடயமாக ஒரு அறிக்கையையும் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவிடம் நஸீர் ஹாஜி சமர்ப்பித்துள்ளார் .
மேலும் அடுத்த பொதுத்தேர்தலுக்கு முன் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறும் இதன்போது பிரதி அமைச்சரை, நஸீர் ஹாஜி கேட்டுக் கொண்டார்.
இவரது இந்தக் கோரிக்கையை பிரதி அமைச்சரும் ஏற்றுக் கொண்டுள்ளதாக சமூக ஆர்வலர் கல்முனையை சேர்ந்த ஏ.எம்.நசீர் ஹாஜி தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்