வில்பத்துவ தேசிய பூங்காவிற்கு அடுத்ததாக ஓடும் கலாஓயாவில் சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கலாஓயாவில் சடலமொன்று மிதப்பதாக வனாத்தவில்லுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர்.
இவர் அண்மையில் கலாஓயாவில் நீராடச் சென்ற போது சிலருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வனாத்தவில்லுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்