புத்தளம், கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
ஜனசவிபுர, கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய மீனவரொருவரே காணாமல் போயுள்ளார்.
இவர் கடந்த 23 ஆம் திகதி மற்றுமொரு மீனவருடன் இணைந்து கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்பகுதிக்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்றிருந்த போது திடீரென நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, கற்பிட்டி பொலிஸார் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து காணாமல் போனவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்