மாத்தறை,தெவிநுவர, தல்பாவில பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கந்தறை பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேக நபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர், ஆரம்பத்தில் உலர்ந்த மீன்களை வாங்க விரும்புவதாகக் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் அவர்கள் மீது எழுந்த சந்தேகங்கள் காரணமாக, வர்த்தகர் சில்லறை விலையில் உலர் மீன்களை வழங்குவதில்லை என்றும், மொத்தமாக மட்டுமே விற்பனை செய்வதாகவும் கூறியுள்ளார்.
பின்னர் சந்தேக நபர்கள் வெளியேறத் தயாரானபோது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட முயன்றதாகவும் கூறப்படுகிறது.
துப்பாக்கி பிரயோகத்தில் வர்த்தகரின் வீட்டின் மேற்கூரை சேதமடைந்துள்ளதுடன் எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் சிசிடிவி கேமரா அமைப்பில் பதிவாகியுள்ளதுடன், சந்தேக நபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கந்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.