கம்பஹா – வத்துமுல்ல பகுதியில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது கொலைக் குற்றச்செயலுக்கு தாயாராக இருந்த நிலையில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து இரண்டு ரீ 56 துப்பாக்கிகள், 118 தோட்டாக்கள், 3 மெகசின்கள் மற்றும் 3 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கமைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் இருவரையும் குறித்த குற்றக்கும்பலுக்கு அறிமுகப்படுத்திய திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் ஒருவரும் 4 கைபேசிகளுடன் குருணாகல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.