இராணுவ சிப்பாயான தனது கணவனின் ஆணுறுப்பை பாக்குவெட்டியால் வெட்டி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அனுராதபுரம் யஹலேகம பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
வீட்டில் தனது கணவன் பகலில் உறங்கிக் கொண்டிருந்தபோது ஏற்கனவே இவர்களுக்கிடைய ஏற்பட்ட உள்ளக முரண்பாடு காரணமாக பாக்குவெட்டியினால் கணவரின் ஆணுறுப்பை வெட்டி காயப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து காயமடைந்தவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மனைவியை 2 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதிவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, சந்தேக நபரை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மனநல பிரிவில் அனுமதித்து வைத்திய சோதனைகளை மேற்கொண்டு எதிர்வரும் 17ஆம் திகதி வைத்தியர் சான்றிதழை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்