குவைத்திலுள்ள கட்டடமொன்றில் இன்று புதன் கிழமை அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
குவைத்தின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் வசித்து வந்த கட்டடமொன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர்களில் 4 இந்தியர்கள் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள குவைத் காவல்துறையினர், தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்