-நுவரெலியா நிருபர்-
நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, நோட்டன் தியகல 3 ம் கட்டை வீதியில் பாரிய மண் சரிவு ஏற்பட்டு உள்ளது, என நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனால் அவ்வீதியூடாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.
அதற்கு மாற்று வழியாக நோட்டன் லக்சபான வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கி உள்ளதாக, நோட்டன் பொலிஸ் நிலைய போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார்.
மஸ்கெலியா நகரில் இருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் லக்சபான வழியாக திருப்பி அனுப்பப்படுவதாகவும், நேற்றும், இன்று திங்கட்கிழமையும் சிவனடி பாதமலை பருவகாலம் நிறைவு பெறுவதை முன்னிட்டு தியகல வீதியை பயன்படுத்த வேண்டாம், என கினிகத்தேன பொலிஸார் தெரிவித்து வருகின்றனர்.
யாத்திரிகர்கள் நலன் கருதி முன்னறிவித்தல் வழங்கி வருகின்றனர்.











