கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கு இணையவழி முறை மூலம் ஒரு திகதியை முன்பதிவு செய்து , குறித்த திகதியில் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இன்றைய தினம் யாரேனும் ஒருவர் திகதியை முன்பதிவு செய்தால், அவர்களுக்கு ஜூன் 27 ஆம் திகதி கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவித்தார் .
இணையவழி முறைமைக்கான திகதி, 05 மாதங்களுக்கு முன்பே ஒரு திகதியில் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் ,ஒதுக்கப்பட்ட திகதிக்கு முன்னர் அவசர தேவையுடையவர்களுக்கு , அவர்களுடைய தேவையைக் கருதி கடவுசீட்டுக்களை பெறுவதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்