புத்தளம் – வென்னப்புவ கடலில் நீராடச் சென்று காணாமல் போயுள்ள மூவரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சுற்றுலா மேற்கொண்டிருந்த நிலையில், குறித்த கடலில் நீராடச் சென்றவர்களில் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் காணாமல் போயுள்ளனர்.
ஹட்டன் – பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போயுள்ள மூவரைத் தேடும் பணிகளை பொலிஸார், பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.