மொரட்டுவை, முரவத்த பிரதேசத்திலுள்ள கடற்கரை பகுதியில் இன்று புதன் கிழமை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மொரட்டுவை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய நபரொரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் நீராடிக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலமானது பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்