-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற இரண்டு கடற்படை புலனாய்வாளர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
காரைநகர் கடற்படை முகாமில் கடமையாற்றி வரும் குறித்த இரண்டு கடற்படை புலனாய்வாளர்களும், காரைநகர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு கஞ்சாவினை விற்பனை செய்வதற்கு முயன்றுள்ளார்.
இந்நிலையில் அவ்விடத்திற்கு சென்ற ஊர்காவற்துறை பொலிஸார், கஞ்சாவினை விற்பனை செய்ய முயன்ற கடற்படை புலனாய்வாளர்கள் இருவரையும், கஞ்சாவினை வாங்க முயன்ற பொதுமகன் ஒருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 1 கிலோ 340 கிராம் எடையுடைய கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.