நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதிக்கு அருகில் தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை இரவு நானுஓயா பொலிஸார் மேற்கொண்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் மேற்கொண்ட சோதனையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை – ஹாலிஎல பகுதியை சேர்ந்த 27 வயது உடைய லொறி சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார் .
இதன் போது 180 மில்லிகிராம் நிறையுடைய கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணையின் பின்னர் சந்தேகநபர் இன்று செவ்வாய்க்கிழமை நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.