-மூதூர் நிருபர்-
மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது சட்டவிரோத கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ் சுற்றிவளைப்பானது நேற்று வியாழக்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது மூதூர் பச்சநூர் பகுதியில் வைத்து ஒருவரிடமிருந்து 52500 மில்லி லீற்றர் மற்றையவரிடமிருந்து 45000 மில்லி லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது.
அத்தோடு கசிப்பு கொண்டு செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிண்ணியா ஈச்சந்தீவு பகுதியைச் சேர்ந்த 46, 42 வயதுகளை உடையவர்கள் என்ன பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.