ஓட்டமாவடி – மீராவோடை ஹாஜியார் வீதியைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காய்ச்சல் காரணமாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்துள்ளார்.
இவர், இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரியும், மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய அதிபருமான ஏ.ஜே.மர்சூக் என்பவரின் புதல்வராவார்.