கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி பத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தலங்கம கொஸ்வத்த 8ஆம் கட்டை பகுதியில் பாதை இலக்கம் 190 மீகொடவிலிருந்து கொழும்பு மற்றும் பாதை இலக்கம் 177 கடுவெல கொள்ளுப்பிட்டி வரை இயங்கும் பேருந்துகளே இவ்வாறு மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்










