சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 17ஆவது இந்தியன் பிறீமியர் லீக்கின் 7ஆவது போட்டியில் குஜராத்தை 63 ஓட்டங்களால் வீழ்த்திய நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் இந்த வருடம் தனது 2ஆவது நேரடி வெற்றியை பதிவு செய்தது
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் மூவரின் அதிரடி துடுப்பாட்டங்களின் உதவியுடன் 20 ஒவர்களில் 6 விக்கெட்களை இழந்து 206 ஓட்டங்களைக் குவித்து வெற்றியை பதிவு செய்தது
