-பதுளை நிருபர்-
ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்
25 வயதுடைய மஹியங்கனை சொரபோர பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தெஹிவளை பகுதியில் இருந்து ஐஸ் போதைப் பொருளை கொண்டு வந்து மஹியங்கனை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மஹியங்கனை பொலிஸார் குறித்த சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரிடம் இருந்து 15 கிராம் 800 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் கையடக்க தொலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்