-யாழ் நிருபர்-
ஏ9 – வீதி யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவ்வீதியால் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம் பெற்றுள்ளது. விபத்தை ஏற்படுத்திய பேருந்து தப்பிச் சென்ற நிலையில் பொலிஸாரிடம் சிக்கியது.
இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த சின்னராசா சுதன்ராஜ் (வயது 40) என்பவரே உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணையினை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.