ஏறாவூர் பழைய சந்தை வீதியில் அமைந்துள்ள ஹர அஹர முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் விடுகை விழாவும் அல் ஜுப்ரியா வித்தியாலய மண்டபத்தில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் பர்ஸானா அனீஸ் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர் நகர சபை முன்னாள் தவிசாளரும் நசீஹா குழும நிறுவன பணிப்பாளருமான M.S.M நலீம் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன்
ஏனைய அதிதிகளாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலை வைத்தியர் ஜலீலா முஸம்மில் , சட்டத்தரணி சுல்பிகா அஹமட் சக்கி, ஓய்வு பெற்ற உதவி கல்விப் பணிப்பாளர் நஸீர், ஏறாவூர் நகர கலாசார உத்தியோகத்தர் ஜனாப் எஸ்.ஏ.எம் நளீம், மட்டக்களப்பு முன்பள்ளி பணியக வெளிக்கள உத்தியோகத்தர் எம்.ஐ.மாஹிர், முன்பள்ளி இணைப்பாளர் சக்கினா பௌசுல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
முன்பள்ளி பாலர்களின் கலை நிகழ்வுகள் பார்ப்போரை கவரும் வகையில் அமைந்ததுடன் பாடசாலை மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.


