மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள புன்னக்குடா, தளவாய் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியொருவர் காணாமல் போயுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தளவாய் பகுதியைச் சேர்ந்த சசிகரன் சஞ்யுதா (வயது 19) என்ற யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அவரது தாயாரான சரோஜாதேவி தெரிவித்துள்ளார்.
கடந்த 12 ஆம் திகதி இரவு 7.45 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறிய தனது மகள் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும், அவரைப் பற்றிய எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் தாயார் பொலிஸில் அளித்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த யுவதி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களுக்கோ தொடர்பு கொண்டு அறியத்தருமாறு உறவினர்கள் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
தொடர்புகளுக்கு:
075 510 6546
075 061 5620










