ஏப்ரல் 21 தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை விசுவாசத்தின் சாட்சிகளாக அங்கீகரிப்பதற்கு வத்திக்கான் தீர்மானித்துள்ளது.
கர்தினால் மெல்கம் ரஞ்சித்தினால் பாப்பரசர் பிரான்சிஸிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அங்கீகாரம் தொடர்பான பிரகடனம் நாளை மாலை 5:30 க்கு கட்டுவாபிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் அறிவிக்கப்படும் என பேராயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.