பேராதனை பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சங்கம் 14ஆவது முறையாக ஏற்பாடு செய்துள்ள இமயமலைப் பயணத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர் தயாராகியுள்ளனர்.
இந்நிகழ்வில் பங்கேற்கும் அணியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவி எம்.ஏ. சந்துனி காஞ்சனா இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜே. ஹர்ஷ தர்மபிரிய (அணித் தலைவர், பொறியியல் பீடம்), ஆர். எம். டி.டி பி. சமரகோன் (விஞ்ஞான பீடம்), எச்.எம்.சி.எஸ் மடவெல (பொறியியல் பீடம்), டபிள்யூ.எச்.எம். தில்ஷான் (கலை பீடம்), எம்.ஏ. சந்துனி காஞ்சனா (பொறியியல் பீடம்) மற்றும் எம்.எம்.எச்.ஆர்.பி. மன்னப்பெரும (விவசாய பீடம்) சேர்ந்த ஆறு மாணவர்கள் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இக்குழுவினர் எதிர்வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து சலேரிக்கும், ஏப்ரல் 20 ஆம் திகதி சலேரியில் இருந்து நமாச்சி பஜார் (3440மீ), கோக்கியோ ஏரி (4760மீ), ஹர்ஹா முதல் எவரெஸ்ட் பேஸ் கேம்ப் (5364மீ) வரை பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.