-பதுளை நிருபர்-
லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அரவாகும்புர கிராம சேவகர் பிரிவில் எல்ரோட் தீகல எல்ல வனப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் பரவிய காட்டு தீயினால் சுமார் 3 ஏக்கர் வனப்பகுதி காட்டு தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது.
இருப்பினும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் மூன்று மர மீன்கம்பங்கள் எரிந்து சாய்ந்துள்ளமையினால் அடாவத்தை, எல்ரோட்இ லுணுகலகம ஆகிய பகுதிகளுக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் லுணுகலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்