சிலாபம் – சிங்ஹபுர பகுதியில் தீக்கிரையான வீடொன்றிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
42 வயதான தந்தை, 40 வயதான தாய் மற்றும் அவர்களது 15 வயது மகள் ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.