-யாழ் நிருபர்-
இன்று சனிக்கிழமை எரிபொருளை நிரப்புவதற்கு சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிந்துள்ளனர்.
இதனால் வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது. பின்னர் வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் குணதிலகவின் வழிகாட்டலின் கீழ் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் போக்குவரத்தினை ஓரளவு சீர் செய்தனர்.
கடந்த சில தினங்களாக எரிபொருள் இல்லாமல் காணப்பட்ட நிலையில் மக்கள் இவ்வாறு குவிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

