-கிண்ணியா நிருபர்-
திருகோணாமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூட்டாம்புளி எனும் பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று நேற்று சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் திருகோணமலை அன்பு வழிபுரத்தைச் சேர்ந்த சிவலிங்கம் ஜெயசீலன் (வயது 53) என தம்பலகாமம் பொலிஸ் தெரிவித்தனர்.
விவசாயி ஒருவர் தனது வயலுக்குச் சென்ற வேளையில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று காணப்பட்டதை அடுத்து தம்பலகாமம் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அவ்விடத்துக்கு வந்த தம்பலகாம பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர் .
குறித்த சம்பவ இடத்துக்கு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதவான் விஜயம் செய்து சடலத்தை பார்வையிட்டதுடன் சட்ட வைத்திய அதிகாரியும் பார்வையிட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்