நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை இரவு 10 மணிமுதல் இன்று காலை 6 மணிவரை அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் பாதுகாப்பு கருதி இன்றைய தினம் நண்பகல் 12 மணி வரையில் நீக்கப்பட்டது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டுள்ளதுடன் பொதுமக்கள் அத்தியாவசிய செயற்பாடுகளுக்கு மட்டும் உரிய ஆவணங்களை காண்பித்து வெளியில் நடமாடக்கூடியவாறு காணப்படுவதுடன் வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளதையும் காணக்கூயதாகவுள்ளது.
இதேவேளை அனைத்து பகுதிகளிலும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இது வரையில் பொது மக்கள் சட்டதிட்டங்களை கடைப்பிடித்து தத்தமது வீடுகளில் இருப்பதையும் காணமுடிந்துள்ளது.