-மூதூர் நிருபர்-
ஊரடங்குச் சட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததோடு, பொதுமக்களின் நடமாட்டம் இன்றி வீதிகள் வெறித்தோடிபோய் காணப்பட்டன.
அத்தோடு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்ததையும்,சோதனை நடவடிக்கையை செய்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.


