-யாழ் நிருபர்-
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாழ் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை, வீதியில் பயணம் செய்து கொண்டிருந்த உழவு இயந்திரத்தின் பின்பக்கமாக வந்த தனியார் பேருந்து உழவு இயந்திரத்தை மோதியுள்ளது.
இதன்போது காயமடைந்த இரண்டு வாகனங்களின் சாரதிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.