-திருகோணமலை நிருபர்-
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை-திம்பிரிவெவ பிரதேசத்தில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை மறைத்து வைத்துக் கொண்டு மிருகங்களை வேட்டையாடி வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த இடத்துக்கு சென்ற பொலிஸார் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மஹதிவுல்வெவ- 01ம் வட்டாரத்தில் வசித்து வரும் அப்புஹாமிகே வீரசேகர (65வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.