கேகாலையில் பண மோசடி குற்றச்சாட்டில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிவடுன்ன பிரதேசத்தை சேர்ந்த ரம்புக்கனை உள்ளூராட்சி சபையின் முன்னாள் பெண் உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
நலத்திட்டங்கள், சுயதொழில் வாய்ப்புக்கள், இசை நிகழ்ச்சிகள், குறைந்த வருமானம் பெறுவோரின் குழந்தைகளுக்கு பயிற்சிப் புத்தகங்கள் வழங்குதல் போன்ற விடயங்களை அடிப்படையாக கொண்டு பேஸ்புக் மூலம் இந்த பண மோசடி இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.