அம்பாந்தோட்டையில் வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலங்கட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் வயோதிபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலங்கொடை பகுதியில் வசிக்கும் 74 வயதுடைய வயோதிபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்