‘ஐகான் ஆஃப் தி சீஸ்’ ( Icon of the Seas) எனப்படும் உலகின் மிகப்பெரிய சொகுசு பயணிகள் கப்பல் தனது முதல் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கத் தயாராகி வருகிறது.
இந்தக் கப்பல் 1,198 அடி நீளம், 250,800 டன் எடை கொண்ட சொகுசுக் கப்பலாகும்.
மேலும் இது சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்காக போர்ட்டோ ரிக்கோவின் போன்ஸ் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது டைட்டானிக் கப்பலை விட ஐந்து மடங்கு பெரியது என்றும் 20 மாடிகளைக் கொண்டது என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
எந்த பயணக் கப்பலிலும் இல்லாத மிகப்பெரிய கடல் நீர் பூங்கா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மியாமி, புளோரிடாவில் இருந்து ஜனவரி 27 அன்று ஏழு இரவு கரீபியன் சுற்றுப்பயணத்திற்கு புறப்படுகிறது.
இந்த கப்பலில் 7,600 விருந்தினர்கள் தங்க முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.