றோயல் கரீபியன் நிறுவனம் உருவாக்கிய உலகின் மிகவும் நீளமான பயணிகள் போக்குவரத்து கப்பல் இன்றையதினம் சனிக்கிழமை தனது பயணத்தை தொடங்கியது.
அனைத்து பொழுது போக்கு அம்சங்களையும் உள்ளடக்கி 20 அடுக்குகளை கொண்டதாக இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அடுக்கிலும் ஒவ்வொரு பிரிவு சுற்றுலா செல்வோர் தங்க நவீன வசதிகளுடன் அறைகள் கட்டப்பட்டுள்ளன.
இதில் 6 நீர் வீழ்ச்சி, 7 நீச்சல் குளங்கள், ஒரு பனிக்கட்டி சறுக்கு மைதானம் 3 தியேட்டர்கள், 40 ஹோட்டல்கள், பார்கள் என்பன இருக்கின்றன.
இந்த பிரமாண்டமான கப்பலில் 7,600 பயணிகள் பயணம் செய்ய முடியும். அவர்களுக்கு உதவி செய்ய 2,350 பணியாளர்கள் கப்பலில் இடம் பெற்றுள்ளனர்.