உக்ரைனுக்கு மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் உதவியை வழங்கவுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
இதற்கமைய, உக்ரைனுக்கு உலக வங்கி இதுவரை 4 பில்லியனுக்கும் அதிகமாக உதவியுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பெப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததன் காரணமாக உக்ரைனில் மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியதோடு, அந்த நாட்டு பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது.
உட்கட்டமைப்புகள் சேதமாக்கப்பட்டுள்ளதோடு தானிய ஏற்றுமதிகள் தடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், போரை எதிர்கொள்ளும் உக்ரைன் மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்படும், என உலக வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.