பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி இன்று வியாழக்கிழமை இலங்கையில் காலமானார்.
இவர் தனது 47ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது
பவதாரிணி புற்றுநோய் காரணமாக இலங்கையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆயுள்வேத சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ள மாபெறும் இசைநிகழ்ச்சிக்காக இளையராஜா நேற்று புதன்கிழமை மாலை இலங்கையை வந்தடைந்தார்.
இலங்கையில் நடக்க இருந்த இசைநிகழ்வுக்காக இளையராஜா வந்திருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.