
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டு மக்களின் பொருளாதாரத்தை பலப்படுத்தி வருகிறார், இன்று இலங்கை ஆசியாவின் அதிசயமாக மாறி வருகிறது, என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ‘தியவர திரிய’ என்ற பெயரில் நடைபெற்ற தேசிய மீனவர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி உலகின் சக்திவாய்ந்த தலைவர் என்பதைக் கூற வேண்டும், அரசியலில் மட்டுமின்றி அறிவாற்றலும் உடைய அவர் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கிறார், அன்று மக்களுக்கு எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை இருக்கவில்லை.
அந்த இருண்ட காலத்தை நினைத்துப் பாருங்கள், அவ்வாறான சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த நாட்டைப் பொறுப்பேற்காத நிலையில், நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க துணிச்சலுடன் ஏற்றுக்கொண்டார்.
நம்பிக்கையின் தீபமாக நாட்டுக்கும் மக்களும் வாழக்கூடிய சூழலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உருவாக்கினார், எதிர்காலத்திலும் சரியான வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து வழங்கும் ஒரு தலைமை நாட்டிற்குத் தேவை.
அதற்காக அவருடைய கரங்களைப் பலப்படுத்த நாம் செயற்பட வேண்டும், அத்துடன், நீண்டகாலமாக நிலவி வரும் மீனவ மக்களின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் தீர்வு காண்பார் என நாம் எதிர்பார்க்கின்றோம், என்றார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
