19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக சாருஜன் சண்முகநாதன் 132 பந்துகளில் 102 ஒட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ஏ.எம் கசன்ஃபர் (AM Ghazanfar) 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
244 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 28 ஓவர்கள் 2 பந்துகளில் 112 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்