நாட்டில் அதிகரித்திருந்த தங்கத்தின் விலையில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த 3 வாரங்களில் இலங்கையில் 22 கரட் தங்கப் பவுனொன்றின் விலையானது கிட்டத்தட்ட 12 ஆயிரம் ரூபாவால் குறைவடைந்துள்ளது.
டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் இலங்கையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக உள்ளூர் தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, நேற்று புதன்கிழமை தங்க அவுன்ஸின் விலை 602,923 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,270 ரூபாவாக இன்று வியாழக்கிழமை பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 170,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 156,000 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,620 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 148,900 ரூபாவாகவும் இன்று வியாழக்கிழமை பதிவாகியுள்ளது.