புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி, அனைத்து அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதலாவதாக கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
மேலும் பிரதமர் ஹரிணி , கல்வி , உயர்கல்வி , தொழிற்கல்வி அமைச்சராகவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
விஜித ஹேரத் வெளிநாட்டமைச்சு, வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.