2024 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதாக மத்திய வங்கியின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி காலப்பகுதியில் இலங்கை 2.17 பில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 66.1 வீத அதிகரிப்பாகும் என மத்திய வங்கியின் தரவுகள் குறிப்பிடுகின்றன.
அதே காலகட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் 50.7 சதவிகிதம் அதிகரித்துள்ளதுடன் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 1.36 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.