இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சள் வனத்தவில்லு, சேரக்குளிய கடற்கரைக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மீட்கப்பட்டுள்ளது.
23 இலட்சம் பெறுமதியான 470 கிலோ மஞ்சள் அடங்கிய பொதிகள் 10 மூடைகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இந்த மஞ்சள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என கடற்படை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் கஜபா கடற்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, ககேவாடிய விசேட கப்பல் படையணியினரால் கைப்பற்றப்பட்ட மஞ்சள் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளது.