இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு பொதியில் இருந்து, 574,425 ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்களைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் கிளார்க் ஒருவரை கொழும்பு துறைமுக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த நவம்பர் 7 ஆம் திகதி அன்று, ஒரு தனியார் நிறுவனம் இந்தியாவிலிருந்து அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது
துறைமுக மற்றும் சுங்க வரிகளை செலுத்திய பின்னர், பொருட்களை விடுவிப்பதற்காக, இலங்கை துறைமுக அதிகாரசபையின் பண்டாரநாயக்க சேமிப்பு கிடங்கில் குறித்த பொதி சேமித்து வைக்கப்பட்டிருந்தது
நவம்பர் 26 அன்று, மற்றொரு நிறுவனத்தைச் சேர்ந்த கிளார்க் ஒருவர், சேமிப்பு கிடங்கிற்குள் நுழைந்து, பொதியிலிருந்து நான்கு அட்டைப் பெட்டிகளைத் திறந்ததாகக் கூறப்படுகிறது.
அட்டை பெட்டிகளை திறந்து, அதிலிருந்த அழகு சாதனப் பொருட்களை திருடியதாக சொல்லப்படுகின்றது.
துறைமுக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.