கொஸ்கம, புஸ்ஸெல்லாவ பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலைக்கு அருகில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைசெய்யப்பட்டவர் அவிசாவளை – புவக்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் ஆவார்.
கொலைசெய்யப்பட்ட தாய் இறப்பர் பால் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.