இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இதன்படி இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 777,914 ரூபாவாக காணப்படுகின்றது.
இதேவேளை 24 கரட் தங்கம் ஒரு கிராம் 27,450 ரூபாவாகவும் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 219,550 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் ஒரு கிராம் 25,170 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 201,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,020 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 192,150 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.