புத்தளத்தில் உள்ள மதுரங்குளி களப்பு பகுதியிலிருந்து இனந்தெரியாத ஆணின் சடலம் இன்று திங்கட் கிழமை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் அங்கு சென்ற பொலிஸாரும், புத்தளம் தடவியல் பொலிஸாரும் இணைந்து விசாரனைகளை மேற்கொண்டனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை எனவும் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.