நாட்டுக்கு வருகைத்தந்துள்ள சுற்றுலாப்பயணிகளில் 21.6 சதவீதமானோர் இந்தியாவிலிருந்தே வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 99,955 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளனர். அவர்களில் இந்தியாவிலிருந்து 21,607 பேர் பிரவேசித்துள்ளனர்.
பிரித்தானியாவில் இருந்து 7,496 பேரும், ஜேர்மனியில் இருந்து 6,651 பேரும், சீனாவில் இருந்து ஆறாயிரத்து 640 பேரும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.
அதற்கமைய, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 14 இலட்சத்து 62 ஆயிரத்து 623 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர்.