மஜித்புரம் நிருபர் தில்சாத் பர்வீஸ்
சம்மாந்துறையில் இருந்து சென்று இந்திய தேசத்தில் தனது திறமையால்
(𝐖𝐊𝐌𝐀 𝐎𝐏𝐄𝐍 𝐊𝐀𝐑𝐀𝐓𝐄 𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒𝐇𝐈𝐏 𝟐𝟎𝟐𝟒) இரண்டாம் இடத்தை தனதாக்கிக் கொண்ட எமது உடன் பிறப்பு சகோதரர் இர்ஸாட் டை பற்றி இந்த ஊர் ஏன் கரிசனை கொள்ளவில்லை.
இப் போட்டியில் கலந்து மூன்றாம் இடத்தை பெற்ற சகோதரரை அந்த ஊரில் உள்ள பெரிய பள்ளிவாசல் அந்த ஊரின் பிரமுகர்கள் தனவந்தர்கள் இணைந்து கௌரவித்தார்கள்.
ஆனால் நமது ஊரில் இவர் யார் என்று கூட எமது சமூகத்திற்கு தெரிய வாய்ப்பில்லாமல் இருக்கின்றது.
இவ்வாறான விடயங்களில் எமது சமூகம் கவனம் செலுத்தாது போனால் எதிர் காலத்தில் ஆளுமை கொண்ட இளைஞர் சமூகத்தை இந்த ஊர் இழந்து நிற்கும்
World Karate Masters Association ஏற்பாடு செய்த திறந்த 🥋 கராத்தே போட்டி 🇮🇳 இந்தியாவின் ஆலந்தூர் நகரின் Montfort Matric உள்ளக அரங்கில் கடந்த 2024.02.18ம் திகதி நடைபெற்றது.
🇮🇳 இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வருகைதந்த 🥋 கராத்தே வீரர்கள் பங்குபற்றிய இப் போட்டியில் International Martial Arts Association (IMA) 🇱🇰 இலங்கைக் கிளை சார்பாக சகோதரர் இர்ஸாட் கலந்துகொண்டு Senior Black Belt Kata நிகழ்சியில் 2️⃣ இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.
இப் போட்டிக்கான விசேட பயிற்சிகளை வழங்கி அவருடைய இந்த வெற்றிக்கு உரமிட்டார் அவரது கராத்தே போதனாசிரியரும் International Martial Arts Association (IMA) இலங்கைக் கிளையின் தலைமை ஆசிரியருமான Shihan Muhammeth Ikbal அவர்களுக்கு சம்மாந்துறை சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.


