ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டத்தின் கீழ் சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாப்பயண முடிவிடம் என்னும் கருத்திட்டத்தின் கீழ் கடற்கரையோரத்தினை சுத்தம் செய்யும் வேலைத் திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.
கிளீன் ஸ்ரீலங்காவின் சுத்தமான கடற்கரை அழகான நாடு, வளமான வாழ்க்கை, கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம் எனும் கருத்திட்டத்தில் ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு கடற்கரையில் இன்று காலை 7:30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
இவ் வேலை திட்டத்தில் மண்முனை, காங்கேயனோடை கிராம சேவகர்கள், சமுத்தி உத்தியோகத்தர்கள், காத்தான்குடி பொலீஸ் அதிகாரிகள், ஆரையம்பதி பிரதேச சபை ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், பிரதேச பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.